மூதாட்டி கொலை செய்து சடலத்தை ரயிலில் கொண்டு வந்த தந்தை மகள்..!
நெல்லூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், தனது மகள் தேவிஸ்ரீயுடன், சென்னை நோக்கி வந்த புறநகர் ரயிலில் பயணம் செய்துள்ளார். அந்த ரயில் மீஞ்சூர் ரயில் நிலையத்தை அடைந்தபோது, ரயிலில் இருந்து இறங்கிய தந்தையும், மகளும் தாங்கள் கொண்டு வந்த சூட்கேசை பிளாட்பாரத்தில் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதனை கண்ட போலீசார் சந்தேகமடைந்து இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த சூட்கேசை சோதனை செய்தபோது, அதில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியின் சடலம் இருப்பதும், தலையில் காயத்துடன் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், மூதாட்டி அணிந்திருந்த தாலி சரடு, செயின், கம்மல் என 50 கிராம் தங்க நகைகளை திருடி கொண்டு சடலத்தை சூட்கேசில் அடைத்து கொண்டு வந்ததாக வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து தந்தை, மகள் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.