10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது!

தன்னுடைய 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வசித்து வரும் கூலித் தொழிலாளியான சண்முகம் (35) மற்றும் தனலட்சுமி தம்பதிக்கு 10 வயது சிறுமி உட்பட 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக தனலெட்சுமி தனது மகளுடன், தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடன் வசித்து வந்த 10 வயது மகளுக்கு, சண்முகம் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி, தனது தாய் தனலெட்சுமியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தனலெட்சுமி அளித்த புகாரின் பேரில் சண்முகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காரிமங்கலம் போலீசார், அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in