மனைவியின் கள்ளக்காதலால் ஆத்திரம்… மகன்களை கொன்ற தந்தை கைது!

மனைவியின் கள்ளக்காதலால் மகன்களை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தையை 2 மாதங்கள் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்த குமார் - உஷாராணி தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில் உஷாராணி தன்னுடன் பணியாற்றும் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். கணவன் பலமுறை கண்டித்தும் கூட உஷாராணி கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், இரண்டு மகன்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்தை கொடுத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.
குமாரின் மகன்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். மருத்துவமனையிலிருந்து சில நாட்களுக்கு முன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்தநிலையில் மனைவி உஷாராணி கொடுத்த புகாரின் பேரில் குமாரை போலீசார் கைது செய்தனர்.
newstm.in