தங்கம் கடத்திய தந்தை மகன் – கண்டுபிடித்த சுங்கத்துறை..!

அதிகாரிகள் தங்கத்தை விதவிதமாக கடத்துவதை திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். தங்கம், வைரம் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து, நம் நாட்டிற்கோ அல்லது நம் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கோ கடத்துவது போன்ற காட்சிகள் அதிகமான தமிழ் திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நாமும் அதனை வாய் பிளந்து பார்த்துக் கொண்டு இருப்போம். தற்போது நிஜத்தில் வாய் பிளக்க வைக்கும் தங்க கடத்தல் ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் நடந்துள்ளது.
ஒரு அப்பாவும் மகனும் வெளிநாட்டிலிருந்து வந்து இறங்கினார்கள் .அவர்களின் லக்கேஜுகளை பார்த்த விமான நிலைய சுங்க துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. சந்தேகம் வந்த காரணத்தால் விமான நிலைய அதிகாரிகள் அவர்களின் பெட்டிகளை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த கைவினை பொருட்களில் தங்கத்தை வைத்து மற்றவர்களுக்கு தெரியாத அளவுக்கு செய்துள்ளதை கணடறிந்தார்கள்.
பிறகு அந்த கைவினை பொருட்களை சோதனை செய்த போது அது முழுவதுமே தங்கத்தால் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அந்த பொருட்களுக்குள் ஒளித்து வைத்துள்ள தங்கத்தின் மதிப்பு 54.70 லட்சம் மதிப்புள்ளது என்று அதிகாரிகள் கூறினார்கள்.
அவர்கள் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கத்தை உருளை குழாய்களில் மறைத்து வைத்திருந்தார்கள். ஆறு மணி நேரம் போராடி அதிகாரிகள் அந்த தங்கத்தை மீட்டெடுத்தனர். மேலும் அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்த போது அவர்கள் இது போல பலமுறை தங்கத்தை கடத்தி வந்துள்ளதாகவும், முன்பு இதே போல் 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்துள்ளதாகவும் கூறியதை
கேட்ட விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தார்கள்.
பிறகு அவர்கள் கொண்டு வந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
newstm.in