உஷார்..! வேகமாக பரவும் Bleeding eye வைரஸ்..! ஒரே வாரத்தில் மூக்கு, கண், காது, வாய் ஆகியவற்றிலிருந்து ரத்தம் கொட்டும்..!
ப்ளீடிங் ஐ வைரஸ் இப்போது ஆப்பிரிக்க நாடுகளைப் புரட்டிப் போட்டு வருகிறது. குறிப்பாகக் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது
The Marburg virus disease (MVD) அல்லது Bleeding eye எனப்படும் இந்த வைரஸ் 17 ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருவதாக WHO தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு ருவாண்டா நாட்டில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 66க்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். எபோலா வைரசுடன் தொடர்புடைய இந்த MVD வைரஸ், கண்ணில் இருக்கும் ரத்த நாளங்களை பாதித்து கண் முதல் உடல் துவாரங்கள் வழியே ரத்தக்கசிவை ஏற்படுத்தும்.
பிரேசில், கென்யா, ருவாண்டா, காங்கோ, உகாண்டா, பொலிவியா உள்ளிட்ட இந்த 15 நாடுகளுக்குச் செல்லும் தங்கள் நாட்டுப் பயணிகளுக்குப் பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.. கொரோனா பரவிய காலத்தில் இதுபோலத் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாடுகளுக்குச் செல்வோருக்குப் பல நாடுகள் எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்பர்க் மட்டுமின்றி கிளேட் 1 மற்றும் ஓரோபூச் காய்ச்சலும் இங்குப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ப்ளீடிங் ஐ வைரஸ் எனப்படும் இந்த மார்பர்க் வைரஸ் நோய் மனிதர்களுக்கு ஏற்படும் மிகவும் ஆபத்தான நோய் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.. பழம் தின்னும் வௌவால் இனமான ரூசெட்டஸ் ஏஜிப்டியாகஸ் என்ற வகை வௌவால்களில் தான் இந்த மார்பர்க் வைரஸ் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்த வைரஸ் நமக்குப் பரவினால் இரண்டு முதல் 21 நாட்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தசைப்பிடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை 3வது நாளில் இருந்து ஆரம்பிக்கும். 5ம் நாள் முதல் வாந்தி மற்றும் மலத்தில் ரத்தம் தென்படத் தொடங்கும். மேலும், மூக்கு, கண், காது, வாய் ஆகியவற்றிலிருந்து ரத்தம் கொட்ட தொடங்கும். சில நேரம் ஆண்களுக்கு ஆணுறுப்புகள் வீங்கவும் செய்யும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். எட்டு முதல் ஒன்பது நாட்களுக்குப் பிறகு பாதிப்பு தீவிரமாக இருந்தால் ரத்தப் போக்கு காரணமாக உயிரிழப்பும் கூட ஏற்படலாம்.