1. Home
  2. தமிழ்நாடு

வேகம் எடுக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு! 26 பேரை கொத்தாக அள்ளிய சிபிசிஐடி !

வேகம் எடுக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு! 26 பேரை கொத்தாக அள்ளிய சிபிசிஐடி !


நீதிமன்ற உத்தரவுப்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 26 பேரை சிபிசி‌ஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் - 4, குரூப் - 2 ஏ, விஏஓ தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியது. இந்த குற்றச்சாட்டால் டிஎன்பிஎஸ்சி மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்தனர்.

இந்த நிலையில், இந்த முறைகேடு தொடர்பான விசாரணை மாநில போலீசாரிடம் இருந்து, சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயகுமார் உள்ளிட்ட 51 பேரை, ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றம் சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தலைமையிலான போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 பேரை கைது செய்தனர்.இந்த நிலையில், மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.

Trending News

Latest News

You May Like