கொரோனா சிகிச்சை மையத்தில் உண்ணாவிரதம்!
தரமான உணவு வழங்கக்கோரி கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகள் நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் காங்கேயம் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டு கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 100 பேர் தங்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கொரோனா சிறப்பு மருத்துவ முகாமில் தற்போது 85 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சூழ்நிலையில் இம்மையத்தில் மாவட்ட நிர்வாகம் சரிவர உணவு விநியோகிப்பது இல்லை எனவும், இது குறித்து புகார் அளித்தாலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த நோயாளிகள் அனைவரும் தரமான உணவு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உணவு உண்ண மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
newstm.in