கர்ப்பிணிப் பெண்களுக்கான ஃபேஷன் ஷோ!
பெண்களின் மகப்பேறு காலத்தை மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், கேரள மாநிலம் கொச்சியில் தனியார் மருத்துவமனை சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை அமலா பால் கலந்துகொண்டார்.
105 கர்ப்பிணிப் பெண்கள் இதில் கலந்து கொண்டனர். உலகளவில் அதிக கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோ என்ற அங்கீகாரம் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளது.