1. Home
  2. தமிழ்நாடு

இழப்பீடு கேட்டு விளைநிலத்தில் கிரிக்கெட் விளையாடிய விவசாயிகள்!!

இழப்பீடு கேட்டு விளைநிலத்தில் கிரிக்கெட் விளையாடிய விவசாயிகள்!!


கடும் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் மழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வந்தவாசியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் கிரிக்கெட் விளையாடி விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இழப்பீடு கேட்டு விளைநிலத்தில் கிரிக்கெட் விளையாடிய விவசாயிகள்!!

அழுகிய நெற்கதிர்களை பந்துகளாக செய்து வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் மனு வழங்குவது போல் விவசாயிகள் பந்து வீசினர். வேளாண்மைத் துறை அதிகாரிகள் விவசாயிகள் கொண்டு வந்த மனுக்களை திருப்பி அனுப்புவது போல் பந்துகளை சிக்சர் அடித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி தாலுகாவில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிட்ட நெல், கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி விட்டது. எனவே, வேளாண்மைத் துறை அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like