விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்..!
டெல்லியை நோக்கி செல்லும் போராட்டத்தை தற்காலிகமாக 2 நாட்கள் நிறுத்தி வைப்பதாக பஞ்சாப் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து விவசாயிகள் சங்க தலைவரான சர்வான் சிங் பாந்தர், 'ஹரியானாவின் கனூரி மற்றும் ஷாம்பு எல்லைகளில் போலீசார் அத்துமீறி நடத்திய தாக்குதலில் விவசாயிகள் பலர் காயமடைந்துள்ளனர்.
பல விவசாயிகள் மாயமாகி உள்ளனர். இந்த 2 நாட்கள் காயமடைந்த விவசாயிகளை சந்திக்க உள்ளோம்' என்றார்.