1. Home
  2. தமிழ்நாடு

சிஐஎஸ்எப் பெண் காவலருக்கு ஆதரவாக குவிந்த விவசாயிகள்..!

11

நடிகை கங்கனா ரணாவத் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் போட்டியிட பாஜக சீட் வழங்கியது. இதில் 5.37 லட்சம் வாக்குகளை பெற்று கங்கனா ரனாவத் வெற்றி பெற்றார். போட்டியிட்ட முதல் முறையிலேயே எம்பி ஆகியுள்ளார் கங்கனா ரனாவத்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றார் கங்கனா ரனாவத். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த குல்விந்தர் கவுர் என்ற சிஐஎஸ்எஃப் கான்டபிள் அவரது கன்னத்தில் அறைந்தார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட கங்கனா ரனாவத், பஞ்சாப்பில் தீவிரவாதம் அதிகரித்து விட்டது என தெரிவித்திருந்தார். மேலும் தன்னை அறைந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி மீதும் உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து சிஐஎஸ்எஃப் பெண் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் எம்பியான கங்கனா ரனாவத்தை தாக்கியது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கங்கனா ரனாவத்தை அறைந்தது ஏன் என குல்விந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் விவசயிகள் 100 ரூபாய் வாங்கி கொண்டு போராட்டம் நடத்துவதாக கங்கனா ரனாவத் பேசியிருந்ததாகவும் அப்போது தனது தாயும் டெல்லியில் போராட்டம் நடத்தியதாகவும் தெரிவித்தார். கங்கனா ரனாவத் விவசாயிகளை அவமதிக்கும் வகையில் பேசியதால் கோபம் ஏற்பட்டு அவரை அடித்ததாக கூறியுள்ளார் குல்விந்தர் கவுர்.

இந்நிலையில், குல்விந்தர் கவுர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுதொடர்பாக வரும் ஜூன் 9-ம் தேதி பஞ்சாபின் மொகாலியில் நீதி பேரணியை விவசாயிகள் நடத்தவுள்ளனர்.

Trending News

Latest News

You May Like