1. Home
  2. தமிழ்நாடு

இனி விவசாயிகளும் கிரெடிட் கார்டு வாங்கலாம் - வட்டி கம்மி.. லாபம் அதிகம்!

1

கிசான் கிரெடிட் கார்டு என்பது விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கும் திட்டமாகும்.

கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் விவசாயிகள் வங்கிகளில் கடன் தள்ளுபடி பெற முடியும். மேலும் வணிகர்களிடமிருந்து பெறும் பணத்தை கொள்முதல், தீவனம் மற்றும் கால்நடை பராமரிப்புக்கு பயன்படுத்தலாம். கிரெடிட் கார்டு திட்டம் என்பது இந்தியாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். இது 1998ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு வங்கி) ஆகியவற்றால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கிசான் கிரெடிட் கார்டு மூலம் பெறப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு.  இந்த அட்டை மூலம் பெற்ற கடனை மிகவும் எளிய முறையில் செலுத்தலாம். அதாவது, வங்கிகளில் விவசாயிகள் வழக்கமாக வாங்கும் கடனைப் போல நெருக்கடி இருக்காது. திருப்பிச் செலுத்த சலுகை கிடைக்கும். விவசாயிகளின் வணிகத் தேவைகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தலாம். இதுபோன்ற நிறைய அம்சங்கள் இந்த கார்டில் உள்ளன.

கடன் மற்றும் நிதியுதவியைப் பெற, விவசாயிகள் அவர்களது நிலத்தின் உரிமையை உறுதி செய்யும் ஆவணங்களுடன் வங்கிக் கிளைக்கு நேரடியாகக் கொண்டு சென்றால் மட்டுமே கடன் பெற முடியும். இத்திட்டம் மூலம் கடன் பெற இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை ஆகும்.இந்த திட்டத்தின் மூலம், விவசாயம், மீன்வளம், கால்நடை வளர்ப்பிற்கான கடன் தேவைகளை விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்கள் மற்றும் உபகரணங்களை வாங்கி கொள்ளலாம். ஒரு விவசாயி 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்...

விவசாயிகள் உரிமையாளர்-பயிரிடுபவர், பங்குதாரர், குத்தகை விவசாயி அல்லது சுய உதவிக் குழு அல்லது கூட்டு பொறுப்புக் குழுவின் உறுப்பினர் போன்ற தகுதிகள் இந்த திட்டத்திற்கு அவசியமாகும். 18 முதல் 75 வயது வரையிலான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிக்கு, இணை விண்ணப்பதாரர் இருப்பது அவசியம்.

கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிக்க சில ஆவணங்கள் கண்டிப்பாக தேவை.. குறிப்பாக, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்று, நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், வங்கி கேட்கும் மற்ற ஆவணங்கள் போன்றவை இருந்தால்தான், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். வங்கிகள்: இந்த திட்டத்தின் கார்டுகளை, நபார்ட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank), பாங்க் ஆப் இந்தியா (Bank of India), எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) மற்றும் ஐ.டி.பி.ஐ (IDBI) ஆகிய வங்கிகள் வழங்குகின்றன. இந்த வங்கிகளில் ஆன்லைனிலேயே இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

Trending News

Latest News

You May Like