விவசாயிகளே ரெடியா இருங்க ! இன்று உங்கள் வங்கி கணக்கிற்கு 2000 ரூபாய் வரபோகுது..!

பி.எம். கிசான் திட்டமானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காகவே மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட திட்டமாகும்.. விவசாயிகளுக்கு பண உதவிகளை, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு வருடத்துக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்கிறது மத்திய அரசு.
இந்த பணத்தை கொண்டு, விவசாயிகள் மானிய விலையில் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தில் 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும் என்பது மிக முக்கியமான அம்சமாக திகழ்கிறது.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி விவசாயிகளுக்கு 16வது தவணை விடுவிக்கப்பட்டது.. 'வழக்கமாக, பிரதமர் கிசான் நிதி 4 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது.. அதாவது பிப்ரவரியில் இருந்து பார்த்தால் வரும் ஜூன் மாதத்தில் 17வது தவணை வெளியாக வேண்டும். ஆனால் கடந்த மாதம் தேர்தல் விதிமுறைகள் காரணமாக பி.எம்.கிசான் தவணை செலுத்துவது தாமதமானது.
இந்நிலையில் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 9.26 கோடி விவசாயிகளுக்கு 17-வது தவணையாக ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் மோடி இன்று (18-ம் தேதி) வழங்குகிறார்.
மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடி, தொடர்ந்து 3-வது முறையாக கடந்த 9-ம் தேதி பதவியேற்றார். அதன்பின் அவர் முதல் கையெழுத்தாக பிஎம்-கிஷான் திட்டத்தின் 17-வது தவணையை விடுவிக்கும் கோப்பில் கையெழுத் திட்டார்.இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் விவசாய பணியை மேற் கொள்ள ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணையாக அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
பிரதமர் தனது சொந்த தொகுதியான வாராணசிக்கு செல்கிறார். இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பி.எம் கிஷான் திட்டத்தின் 17-வது தவணைத் தொகை ரூ.20,000 கோடியை பிரதமர் விடுவிக்கிறார். இதன் மூலம் நாட்டில் உள்ள 9.26 கோடி விவசாயிகள் பயனடைவர்.
மேலும் விவசாய பணிகளில் உதவி செய்வதற்காக சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு டிரோன்கள் மூலம் விவசாய நிலங்களில் மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல பயிற்சிகள் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் அளிக்கப்பட்டுள்ளன. இவர்கள் ‘கிரிஷி சக்திகள்’ என அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு பிரதமர் மோடி சான்றிதழ்களை வழங்குகிறார். இத்திட்டத்தின் கீழ் குஜராத், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திர பிரதேசம், மற்றும் மேகாலயாவில் மொத்தம் 90,000 பெண்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.