1. Home
  2. தமிழ்நாடு

விவசாயிகள் மகிழ்ச்சி..! கும்பகோணம் வெற்றிலை ஏற்றுமதி அதிகரிப்பு..!

1

கும்பகோணம் வெற்றிலையின் ஏற்றுமதி சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகமாக உள்ளது. 2021ஆம் ஆண்டு நாள் ஒன்றுக்கு ஒரு டன்னாக இருந்த ஏற்றுமதி, தற்போது ஒரு நாளைக்கு இரண்டு டன்னாக உயர்ந்துள்ளது. பண்டிகை காலங்களில் இது ஐந்து டன்னாக அதிகரிக்கும்.

காவிரி டெல்டா பகுதியில் விளையும் வெற்றிலைக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் குறிப்பாக திருவையாறு, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம், வலைங்கைமான் போன்ற பகுதிகளில் வெற்றிலை அதிகமாக பயிரிடப்படுகிறது. இந்த வெற்றிலையை கும்பகோணம் வெற்றிலை என்று அழைக்கிறார்கள்.

திருச்சியில் உள்ள காய்கறி மற்றும் பழ ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், கும்பகோணம் வெற்றிலையின் ஏற்றுமதி ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. 2021ல் ஒரு டன்னாக இருந்த ஏற்றுமதி, தற்போது ஒரு நாளைக்கு இரண்டு டன்னாக உயர்ந்துள்ளது. தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் ஏற்றுமதி நான்கு முதல் ஐந்து டன்னாக அதிகரிக்கும் என்கிறார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளில் அதிக வெப்பம் காரணமாக வெற்றிலை 24 மணி நேரத்தில் காய்ந்துவிடும். அதனால், திருச்சியில் இருந்து விமானம் மூலம், பாதுகாப்பான கொள்கலன்களில் தினமும் வெற்றிலை அனுப்பப்படுகிறது. சில ஏற்றுமதியாளர்கள் கத்தார் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கும் வெற்றிலையை அனுப்புகிறார்கள்.


சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் உள்ள மக்களும் வெற்றிலை போடும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். குறிப்பாக பிரியாணி சாப்பிட்ட பிறகு 'ஸ்வீட் பீடா' போடும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதில் வெற்றிலை, பாக்கு, தேன் மற்றும் சில பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

Trending News

Latest News

You May Like