டெல்லி நோக்கி பேரணி நடத்த முடிவு: விவசாய சங்கங்கள் அறிவிப்பு..!
பஞ்சாபின் சண்டிகரில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைள் தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்காததற்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சங்கத்தின் தலைவர் கூறுகையில்,
கடந்த 9 மாதங்களாக நாங்கள் அமைதியாக காத்திருந்தோம். ஆனால் எந்த பலனும் இல்லை. எனவே அரசுக்கு எதிராக பேரணியை மீண்டும் தொடங்குவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. வருகிற டிசம்பர் 6-ம் தேதி டெல்லி நோக்கி பேரணி செல்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
விவசாயிகள் அம்பாலா – புதுடெல்லி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஷம்பு எல்லையில் இருந்து தலைநகர் டெல்லி நோக்கி செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.