1. Home
  2. தமிழ்நாடு

அருமையான மனிதர் , அற்புதமான நடிகர்.. நடிகர் டெல்லி கணேஷ்க்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்..!

1

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லிகணேஷ் (80) நேற்று இரவு காலமானார். கடந்த 3 நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன் அவரின் உடல்நிலை மோசமானது.

இந்நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு உறங்கச் சென்ற நிலையில் 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு முழுக்க திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கணேஷுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; "என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like