அருமையான மனிதர்... என்னுடைய நீண்ட கால நண்பர் - ரஜினி இரங்கல்..!
திமுக-வின் கொள்கைப் பரப்பு பத்திரிகையான முரசொலி பத்திரிகையில், சுமார் 50 ஆண்டுகளாக நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார். 84 வயதான முரசொலி செல்வம், வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் மகள் செல்வி. இவரின் கணவர் தான் முரசொலி செல்வம்.
இவரின் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “முரசொலி செல்வம் என்னுடைய நீண்ட கால நண்பர். அருமையான மனிதர். அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
திரு முரசொலி செல்வம் அவர்கள் என்னுடைய நீண்ட கால நண்பர். அருமையான மனிதர். அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். #MurasoliSelvam
— Rajinikanth (@rajinikanth) October 10, 2024