ரசிகர்கள் கொண்டாட்டம்..! ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 13 இடங்களில் தொடக்க விழா..!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் எனப்படும் பிசிசிஐ ஐபிஎல் 2025 தொடருக்கான 18ஆவது சீசனில் 13 இடங்களில் தொடக்க விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டிக்கு முன்னதாக ஐபிஎல் 2025 தொடக்க விழா நடக்க இருக்கிறது. இதில், பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷ், நடிகை திஷா பதானி, இந்திய ரேப்பர் மற்றும் பின்னணி பாடகரான கரண் அவுஜ்லா ஆகியோர் இசை மற்றும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இந்த தொடக்க விழாவில் தான் தான் பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான் மற்றும் ஷாருக் கான் இருவரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஷாருக்கானின் சொந்த அணி தான் ஐபிஎல் 2025 தொடக்க விழாவில் தங்களது ஹோம் மைதானத்தில் விளையாடுகிறது. அதலால் கண்டிப்பாக ஷாருக்கான் ஐபிஎல் 2025 தொடக்க விழாவில் இடம் பெறுவார் என்று தெரிகிறது.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 13 இடங்களில் தொடக்க விழா நடத்த பிசிசிஐ ஏற்பாடுகள் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. மேலும் ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசனானது கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், அகமதாபாத், கவுகாத்தி, மும்பை, லக்னோ, பெங்களூரு, சண்டிகார், ஜெய்ப்பூர், டெல்லி, தர்மசாலா ஆகிய 13 இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த 13 இடங்களிலும் தான் ஐபிஎல் தொடக்க விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
13 இடங்களில் தொடக்க விழா நடத்தப்படுவது இது முதல் முறையாக இருந்தாலும், ஐபிஎல் 2017 தொடரின் 10ஆவது சீசனின் போது 8 அணிகள் பங்கேற்ற நிலையில், அந்த 8 மைதானங்களிலும் ஐபிஎல் தொடக்க விழா நடத்தப்பட்டது. இந்த நிலையில் தான் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 13 இடங்களில் தொடக்க விழா நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது பிசிசிஐயால் மட்டும் முடியாது. அதற்கு மாநில சங்கங்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.