1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்கள் கொண்டாட்டம்..! யூடியூப் சேனல் தொடங்கிய அஜித்..!

1

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் அஜித் என்பதும் அவரது ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியானது என்பதும் தெரிந்தது.

’விடாமுயற்சி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் ’குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் அவருக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு கிடைத்த சூப்பர் ஹிட் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குவார் என்றும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போது அவர் முழுமையாக கார் ரேஸில் கவனம் செலுத்தி கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் நவம்பரில் தான் தொடங்கும் என்று அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 

இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது  X தளத்தில், 'AJITHKUMAR RACING' என்ற அதிகாரப்பூர்வ புதிய யூடியூப் சேனல் தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதிலிருந்து, அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்கும் ரேஸ்கள் அனைத்தும் இந்த யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவரது இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 


 

Trending News

Latest News

You May Like