ரசிகர்கள் ஷாக்..! வீர தீர சூரன்-2 படத்துக்கு தடை..!

சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்திருக்கும் படம் வீர தீர சூரன் 2.ரியா சுப்புவின் ஹச்ஆர் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், சித்திக், சுராஜ் வெஞ்சரமுடு ஆகிய பல நடித்துள்ளனர், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் இரண்டாவது பாகமாகும். பொதுவாக தமிழ் சினிமாவில் முதல் பாகம் வெளி வந்த பின்னர் தான் இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால் இந்த படத்தின் இயக்குனர் அருண்குமார் முதலில் இரண்டாம் பாகத்தை வெளியிட்டு விட்டு அதற்குப் பிறகு முதல் பாகத்தை வெளியிட இருக்கிறார்.
Also Read - VR மாலில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தடை!
இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வீர தீர சூரன் 2 திரைப்படம் இன்று வெளியாக இருக்கிறது.இந்த நிலையில் வீர தீர சூரன் 2 படம் வெளியாவதில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்கிய வழக்கில் அதன் வெளியீட்டுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது.
பி4யூ என்ற தயாரிப்பு நிறுவனம் 2 படத்தில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அந்த நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமையை தயாரிப்பாளர் பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்தத்தில் இருப்பது படி ஓடிடி உரிமைத்த விற்கவில்லை என்றும், அதற்குள் படம் வெளியாக தயாராகி விட்டதால் படத்தை ஓடிடியில் விற்க முடியவில்லை. இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும், உதவி செய்த பணத்தில் 50 சதவீதத்தை நஷ்ட ஈடாக தர வேண்டும் என பி4யூ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தயாரிப்பு நிறுவனத்துடன் சமாதானம் பேசி படத்தை வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் விடிந்தால் படம் ரிலிஸ் என்ற நிலையில், திட்டமிட்டபடி வெளியாகுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.