1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்கள் அதிர்ச்சி..! கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஸ்டீவன் ஃபின்!

1

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்டீவன் ஃபின். இவர், சுமார் ஓராண்டாக காயம் காரணமாக எந்தவொரு உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவில்லை. இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத ஸ்டீவன், சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இவர், இங்கிலாந்து அணிக்காக 36 டெஸ்ட்களில் 125 விக்கெட்டுகளையும், 69 ஒருநாள் ஆட்டங்களில் 102 விக்கெட்டுகளையும் 21 டி20 ஆட்டங்களில் பங்கேற்று 27 விக்கெட்டுகளையும் ஃபின் வீழ்த்தியுள்ளார். 2010-11 ஆஷஸ் தொடரில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஃபின், 2015 ஆஷஸ் தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி அந்தத் தொடரை வென்றது. அதில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

Sterven Finn

முதல் தர கிரிக்கெட்டில் 570 விக்கெட்டுகளை வீழ்த்திய ஃபின் ஆரம்பத்தில் மிடில்சக்ஸ் அணிக்காக விளையாடினார். 2022-ல் சசக்ஸ் அணியில் இணைந்தார்.

தனது ஓய்வு குறித்து ஃபின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 12 மாதங்களாக எனது உடலுடன் போட்டியிட்டு, இறுதியில் தோல்வியை ஒப்புக்கொண்டேன். நான் 2005-ல் மிடில்சக்ஸ் அணி மூலம் கிரிக்கெட்டில் அறிமுகமானேன். இந்தப் பயணம் எப்போதும் சுமூகமாக இருக்கவில்லை. ஆனாலும் நான் அதை விரும்பினேன்.

இங்கிலாந்துக்காக 36 டெஸ்ட் போட்டிகள் உட்பட 125 ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். இது என் கனவிலும் எதிர்பாராதது. என்னை முழு மனதுடன் வரவேற்று கடந்த 12 மாதங்களாக எனக்கு வழங்கிய ஆதரவுக்காக சசக்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். திறமையை வெளிப்படுத்துவதற்கான அருமையான இந்த களத்தில் பல ஆட்டங்களில் பங்கேற்க முடியாமல் போனதற்காக வருத்தப்படுகிறேன்.



கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் என்னுடைய திறமைகளை இந்த விளையாட்டிற்காக பயன்படுத்துவேன் என நம்புகிறேன். ஆனால் இப்போதைக்கு, என்னுடைய உடலால் அதைச் செய்ய முடியுமா எனக் கவலைகொள்ளாமல் கிரிக்கெட்டை ரசித்துப் பார்க்க இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like