ரசிகர்கள் அதிர்ச்சி..! கண் பார்வையை இழந்துள்ள சிம்பு பட நடிகை..!!
சிம்பு,பரத்,அனுஷ்கா போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்த படம் தான் வானம். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ஜாஸ்மின் பாஸின்.வானம் படத்திற்கு இரன்டு ஆண்டுகள் இவருக்கு எந்த படத்தின் வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதன் பிறகு படத்தின் “கரோர்பதி” என்ற படத்தில் நடித்திருந்தார்.அதன் பிறகு ஒரு மலையாள படத்தில் நடித்துவிட்டு வேறு எந்த மொழியிலும் வாய்ப்பு கிடைக்காமல் பின்னர் தெலுங்கில் ஒரு 3 படங்களில் நடித்துவந்தார்.
இந்த நிலையில்,நடிகை ஜாஸ்மின் பாசின் கண்பார்வை இழந்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். கான்டாக்ட் லென்ஸ்கள் அணிந்ததால் தன் கருவிழிப் பகுதி பாதிக்கப்பட்டு, தன்னால் பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார். ஜூலை 17 அன்று நடந்த ஒரு நிகழ்வில் தான் இந்த சிக்கலை எதிர்கொண்டதாக அவர் கூறினார். அவரது கருவிழி சேதமடைந்துள்ளதாகவும், தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.