ரசிகர்கள் அதிர்ச்சி..! நாளைய போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடத் தடை..!
நாளைய போட்டியில் விளையாட டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது. டெல்லி அணி மெதுவாக பந்து வீசியதற்காக ஏற்கனவே 2 முறை அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், 3வது முறையாக ராஜஸ்தான் எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ரூ.30 லட்சம் அபராதம், ஒரு போட்டியில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அபராதமும் மூன்றாவது முறை அதிகநேரம் எடுத்துக்கொண்டால் அபராதமும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படும்.
இதனால் ஆர்சிபி அணிக்கு எதிரான நாளைய போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார்.. இது அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது