1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்கள் அதிர்ச்சி..! பிரபல பைரேட்ஸ் ஆப் கரீபியன் நடிகர் சுறா கடித்து பலி..!

1

உலக அளவில் ’பிரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ திரைப்படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் நடிகர் டமாயோ பெர்ரி.கடல் சாகசப் பிரியரான இவர், கடல் ஸர்பிங் சாகசத்தில் பயிற்சி பெற்றவர். 

இந்நிலையில், ஹவாய் தீவிலுள்ள கோட் தீவில் கடந்த ஞாயிறன்று(ஜூன் 23) பகலில் அலை சறுக்கல் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரை சுறா மீன் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடலில் உயிருக்கு போராடியபடி ஒரு நபர் துடித்துக் கொண்டிருந்ததைக் கண்ட சிலர், ஹோனலூலு காவல்துறைக்கும் கடல் பாதுகாப்புப் படைக்கும் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய டமாயோ பெர்ரியை கரைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சையளித்துள்ளனர்.எனினும், அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டதாக ஹோனலூலு காவல்துறை மற்றும் கடல் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை(ஜூன் 24) தெரிவித்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like