ரசிகர்கள் ஷாக்..! பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று..!

உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்த வகை கொரோனா ஆபத்தை ஏற்படுத்தாது இருந்தாலும் எச்சரிக்கையுடன் சமூக இடைவெளி முகக்கவசம் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இணைநோய்கள் இருப்பவர்கள் கர்ப்பிணிகள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
2020 ல் உச்சத்தில் இருந்த கொரோனா காரணமாக உலகம் முழுவதும் முடங்கியது. ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் உலகில் சில நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருகிறது.
அதன்படி பிரேசில் கால்பந்து வீரரான நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அணியினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே போன்று இந்தியாவிலும் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரையில் 6000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.