1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்கள் அதிர்ச்சி..! ராஷ்மிகாவை தொடர்ந்து வெளியான கத்ரீனா கைப்பின் டீப் ஃபேக் வீடியோ..!

1

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்திய போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக ராஷ்மிகா கவலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த ‘டீப் ஃபேக்’ மூலம் நடிகை கேத்ரீனா கைஃப்பின் போலி புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.அவரது நடிப்பில் அடுத்ததாக ‘டைகர் 3’ படம் நவம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் சல்மான் கான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்தப் படத்தில் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளருடன் குளியலறையில் வெள்ளை நிற துண்டை அணிந்து சண்டையிடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் கேத்ரீனா. மேலும், இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது தான் சந்தித்த சவால்கள் குறித்தும் அவர் அதில் தெரிவிந்திருந்தார்.

தற்போது அவரின் அந்த ஒரிஜினல் புகைப்படத்தை யாரோ ஒருவர் ‘டீப் ஃபேக்’ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளார். இந்தப் போலிப் புகைப்படம் வைரலாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like