ரசிகர்கள் ஷாக்..! இந்தியாவை விட்டு குடும்பத்தோடு வெளியேறுகிறாரா விராட் கோலி..?
விராட் கோலி இந்தியாவை விட்டு வெளியேற திட்டமிட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. டெல்லியில் பிறந்து வளர்ந்த கோலி, சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு குடிபெயர்ந்தார்.
விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், விராட், தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் - வாமிகா (பிறப்பு ஜனவரி 2021) மற்றும் அகே (பிறப்பு பிப்ரவரி 2024) - லண்டனுக்கு குடியேறத் திட்டமிட்டுள்ளார், விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறி குடியேறுவார் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவை பெரும்பாலானவரால் அடையாளம் காண முடியாது. அதுவே இந்தியாவில் எங்கு சென்றாலும் விராட் கோலியால் சாதாரணமாக இருக்க முடியாது. இதனால் அவர்களால் சாதாரண மக்களை போன்ற வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதால் இந்தியாவில் இருந்து வெளியேறி லண்டனுக்கு செல்லும் முடிவை விராட் - அனுஷ்கா தம்பதி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது