1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்கள் ஷாக்..! அடுத்த 9 மாதங்களுக்கு நான் எந்த படங்களிலும் நடிக்க போவதில்லை - அஜித் அறிவிப்பு..!

Q

ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் நடைபெறும், '24 எச் மற்றும் ஐரோப்பிய 24 எச் சாம்பியன்ஷிப் கார் ரேஸ்' போட்டிகளில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கிறார்.

இந்நிலையில், போட்டிக்கு முன் நடந்த கார் ரேஸ் பயிற்சியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார்.அப்போது, எதிர்பாராதவிதமாக, அவர் ஓட்டிய ரேஸ் கார் விபத்துக்குள்ளாகி, அருகே இருந்த தடுப்புகள் மீது மோதி சுற்றி சுழன்று நின்றது. இதில், காரின் முன்பக்கம் முற்றிலும் சேதமானது. எனினும், அந்த காரில் இருந்து காயம் ஏதுமின்றி அஜித் தப்பியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அஜித்குமார் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: 18 வயது முதல் பைக் ரேசில் ஈடுபட்டு வருகிறேன். சினிமாவில் பணியாற்றியதால் சில காலம் பங்கேற்க முடியவில்லை. 2002ம் ஆண்டு 32 வயதாகும் போது மீண்டும் மோட்டார் ரேஸிங்கில் ஈடுபட்டேன். கார் ரேஸிங்கிலும் ஈடுபட்டேன். இந்தியாவில் நடந்த ரேஸிங்கில் பங்கேற்றேன்.

2003 பார்முலா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றதுடன் அந்த ஆண்டு முழுதும் நடந்த தொடர்களில் பங்கேற்றேன். 2004 ல் பிரிட்டிஷ் பார்முலா 3 ரேஸிங்கில் 'ஸ்காலர்ஷிப்'பிரிவில் பங்கேற்றாலும், துரதிர்ஷ்டவசமாக பணிச்சூழல் காரணமாக அதனை முழுமையாக முடிக்க முடியவில்லை.இதனால் சில காலம் காத்திருந்தேன். 2010 ல் ஐரோப்பிய பார்முலா 2 சீசனில் பங்கேற்றாலும், சினிமா காரணமாக சில ரேஸில் மட்டும் பங்கேற்க முடிந்தது.

தற்போது மீண்டும் இத்துறையில் ஈடுபட விரும்புகிறேன். ஒரு வீரராக மட்டுமின்றி அணியின் உரிமையாளராக சாதிக்க விரும்புகிறேன். ரேஸிக் சீசன் இருக்கும் அக்., மாதம் வரை படங்களில் நடிக்க மாட்டேன். அடுத்த சீசன் துவங்கும் மார்ச் வரை படங்களில் நடிப்பேன். இவ்வாறு அஜித் குமார் கூறினார்.

Trending News

Latest News

You May Like