1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்கள் அதிர்ச்சி..! அகமதாபாத்தில் விடுதி கட்டணம் 15 மடங்கு உயர்வு..!

1

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் வரும் அக்டோபர் 14-ம் தேதி விளையாடுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தச் சூழலில், அந்த நகரில் தங்கும் விடுதிக்கான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி உட்பட சில போட்டிகளுக்கான தேதியை பிசிசிஐ மாற்றி அமைத்தது. அது போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண அகமதாபாத் வரும் ரசிகர்களுக்கு நடைமுறை சிக்கல்கள் அதிகம் காத்திருக்கிறது.

உலகக் கோப்பையை நல்ல அனுபவமாக மாற்றுவோம், பயணங்கள் சிரமமின்றி தடையின்றி இருக்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்தது. அது நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகம் தான். அகமதாபாத்தில் தங்குவதற்காக வரும் ரசிகர்களுக்கு தங்கள் பாக்கெட்டை மட்டுமல்ல கூட வருபவர்களின் பாக்கெட்டும் காலியாகும் அளவுக்கு ஹோட்டல் கட்டணங்கள் எகிறி வருகின்றன. சராசரி ஹோட்டல் கட்டணங்கள் 15 மடங்கு அதிகரித்துள்ளதாக கள தகவல் வெளியாகியுள்ளது. ஒரு இரவு தங்க ரூ.4,000 கட்டணம் வசூலிக்கும் விடுதிகள், இரு நபர்களுக்கு ரூ.60,000 என கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் அறை முன்பதிவு செய்ய உதவும் புக்கிங்.காம் தளத்தில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like