ரசிகர்கள் ஷாக்..! பிரபல ஹாலிவுட் வில்லி நடிகை திடீர் மரணம்..!

நடிகை மிஷேல் டிராக்டன்பெர்க் அவரது அப்பார்ட்மெண்ட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிஷேல் டிராக்டன்பெர்க் வில்லத்தனமான நடிப்புக்கு பெயர் பெற்றவர். குறிப்பாக காசிப் கேர்ள் என்ற படத்தில் ஜார்ஜினா ஸ்பார்க்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். அதேபோல் பஃபி தி வாம்பயர் படத்திலும் அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தினார். இதற்காக அவர் பல விருதுகளையும் வென்றுள்ளார். தனது 3 வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார் மிஷேல். அதாவது இவர், தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஃபீட் அண்ட் ஃபீட் என்ற படத்தில் இருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர், தொடர்ந்து 36 ஆண்டுகளாக நடித்து வந்தார். தனது 11 வயதிலேயே இவர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவுக்கு நடிப்பில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தார்.
இப்படியான நிலையில் இவர் நியூயார்க்கில் உள்ள அப்பார்ட்மெண்ட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு காரணம் அதுதான் இருக்கும் என பலர் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது, காவல்துறை தரப்பில் இதனை ஏற்றுக் கொண்டாலும், நடிகையின் மரணத்திற்கு வேறு காரணங்கள் இருக்குமோ எனவும் அவரை யாராவது கொலை செய்துவிட்டார்களா எனவும் விசாரித்து வருகிறார்கள்.