ரசிகர்கள் அதிர்ச்சி..! பிரபல ஆர்.ஜே. லாவண்யா திடீர் மரணம்..!
பிரபல ஆர்.ஜே. லாவண்யா கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா துறையில் இருக்கும் லாவண்யா, தனது வசீகரமான குரல் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டாரத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.
முன்னதாக ClubFM, Red FM மற்றும் சவுதியை தளமாகக் கொண்ட UFM ஆகியவற்றில் பணிபுரிந்த ஆர்.ஜே. லாவண்யா, கடந்த இரண்டு வருடங்களாக கேரளா ரேடியோவில் பணிபுரிந்து வருகிறார்.
குறிப்பாக ரேடியோ கேரளாவின் வெள்ளித்திரை, பிரியநேரம் பிரியகீதம், டிஆர்கே ஆன் டிமாண்ட் மற்றும் கானா பீனா போன்ற நிகழ்ச்சிகள் மூலம் துபாயில் உள்ள மலையாளிகளின் விருப்பமான ஆர்.ஜே-வாக லாவண்யா வலம்வந்தார்.
இந்நிலையில், பிரபல ஊடகவியலாளரும், மூத்த ரேடியோ ஜாக்கியுமான ஆர்.ஜே. லாவண்யா கடந்த 13ம் தேதி தன்னுடைய 41வது வயதில் காலமானார். புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லாவண்யாவின் கணவர் பிரபல கர்நாடக இசைக்கலைஞரும் இசை அமைப்பாளருமான அஜித் பிரசாத் (நவநீத் வர்மா) ஆவார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். லாவண்யாவின் திடீர் மறைவால் சோகத்தில் இருக்கும் அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.