1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்கள் ஷாக்..! தனுஷ் பட நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!

Q

கடந்த 2002ஆம் ஆண்டு, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியானது ’துள்ளுவதோ இளமை’. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் தனுஷ், ஷெரின் முதலானோர் அறிமுகமாகினர். இதில் நடிகர் அபினய் முக்கிய வேடத்தில் நடித்து, அறிமுகமாகி இருந்தார்.

'துள்ளுவதோ இளமை’ படத்திற்குப் பிறகு, அபினய் பல்வேறு திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றதாகவும், சில படங்கள் தோல்வியடைந்ததால், அதன் பிறகு அமெரிக்க மாப்பிள்ளை, இரண்டாவது ஹீரோ போன்ற வேடங்களில் மட்டும் நடித்து வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். போதிய வருமானம் இல்லாமல் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்தார் அபிநய்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிகிச்சை பெற்று வரும் அபிநயின் வீடியோ வெளியாகியிருக்கிறது. வயிறு வீங்கி ஆள் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்தவர்கள் துள்ளுவதோ இளமை பட ஹேன்ட்சம் பாய் அபிநய்யா இது என ஆச்சரியப்படுகிறார்கள்.

அம்மா இறந்த பிறகு அபிநயின் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. வீட்டில் இருந்த அனைத்தையும் விற்றுவிட்டதாக தெரிவித்தார் அபிநய். எதுவுமே இல்லை, அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுகிறேன். ஒரு ரூமில் தங்கியிருக்கிறேன் என கவலையுடன் தெரிவித்தார்.


 


 

Trending News

Latest News

You May Like