ரசிகர்கள் ஷாக்..! பிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலை..!

பஞ்சாப் அதம்பூர் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே வசித்து வந்தார். இந்நிலையில் அவர் குடியிருப்பின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த ஜோக்சார் போலீசார், நடிகையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொள்ளும் முன், தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், ‘இரண்டு படகுகளில் ஏன் சவாரி செய்ய வேண்டும்? அதனால் படகில் மூழ்கி எனது பயணத்தை எளிதாக்கினேன்’ என்று குறிப்பிட்டுள்ளது. மன அழுத்தத்தின் காரணமாக நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை செய்திருக்கலாம் என்று நகர எஸ்பி ராஜ் தெரிவித்துள்ளார். இருந்தும் நடிகையின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த 12ம் தேதி தனது மூத்த சகோதரி வீணா பாண்டேவின் திருமணத்தில் அமிர்தா பாண்டே கலந்து கொண்டார். கடந்த 18ம் தேதி பாகல்பூரில் தங்கியிருந்தார். அவரது கணவர் மும்பை சந்திரமணி ஜாங்டே திரும்பினார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.