ரசிகர்கள் அதிர்ச்சி..! ஐபிஎல் விவகாரத்தில் சிக்கிய நடிகை தமன்னா..!
தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ஒரு நடிகை தான் தமன்னா, தமன்னா தனது பள்ளி படிப்பை மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் முடித்துள்ளார் அதற்கு பிறகு கல்லூரி செல்வதற்கு முன்பே தனது 13 ஆம் வயதிலேயே நடிப்பை படிக்க தொடங்கியுள்ளார். அதன் பிறகு தியேட்டரில் நாடக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த தமன்னா 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அதற்கு பிறகு கல்லூரி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடம் தமன்னாவிற்கு ஒரு நல்ல இடம் கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழில் தமன்னா நடிப்பில் வெளியான பையா, படிக்காதவன், சுறா, சிறுத்தை, தில்லாலங்கடி மற்றும் வீரம் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.அதற்குப் பிறகு தமிழில் பெருமளவிலான படங்களில் நடிக்காமல் இருந்த தமன்னா பாகுபலி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார்.
இருப்பினும் பாகுபலி திரைப்படத்தில் அவர் நடித்த சில காட்சிகள் பெருமளவிலான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது இதனால் தென்னிந்திய திரை உலகம் பக்கம் எட்டி பார்க்காமல் ஹிந்தியில் மட்டுமே தனது அதிக கவனத்தை செலுத்தி வந்த தமன்னா கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடித்தார்.அதற்குப் பிறகும் அதிக வெப் தொடர்கள் மற்றும் ஹிந்தியில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா சமீபத்து சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடி மீண்டும் இளைஞர்கள் அனைவரின் கனவு கன்னியாக மாறினார். இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் தமன்னா நடிப்பில் தமிழில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாக உள்ளது. முன்னதாக தமன்னா குறித்த பல சர்ச்சையான கருத்துக்கள் அவ்வப்போது வெளியான வண்ணமே உள்ளது, இந்த நிலையில் தமன்னாவிற்கு மற்றுமொரு அதிர்ச்சிகர சம்பவத்தை அளிக்கும் படி மகாராஷ்டிரா போலீஸ் வருகின்ற 29ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி தமன்னாவிற்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதாவது கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் லைவ் காட்சிகளை தமன்னா மோசடி செய்து ஒளிபரப்பியதாக புகார்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஃபேர் பிலே ஆப்பின் மூலம் ஐபிஎல் டீமிங்கை சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட மோசடி வழக்கில் நடிகை தமன்னாவும் உடன்பட்டு உள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே மகாராஷ்டிரா சைபர் ஐடி வின் நடிகை தமன்னாவிற்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதோடு வருகின்ற ஏப்ரல் 29ஆம் தேதி சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்திற்கு தமன்னா நேரில் ஆஜராகி இது குறித்து விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே விவகாரத்தில் லியோ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது ஆனால் அவர் படபிடிப்பின் பிஸியாக இருப்பதாக கூறி மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசின் சம்மனுக்கு ஆஜராகாமல் இப்போதைக்கு வர முடியாது மற்றுமொரு தேதியில் வருவதாக அவர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழ் மக்களிடையே நீண்ட இடைவெளியை எடுத்து தற்போது அரண்மனை 4 திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த தமன்னாவிற்கு தற்போது அரண்மனை 4 திரைப்படம் வெளியாவதை ஒட்டி ஐபிஎல் விவகாரம் தமன்னாவை சூழ்ந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.