1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்கள் ஷாக்..!மருத்துவமனையில்நடிகை சமந்தா..!

Q

இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் சமந்தா, சில காலமாக மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு இந்த அரிய வகை தசை நோயிலிருந்து ஓரளவு குணமானார். சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்த சமந்தா, தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

இந்நிலையில் நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனை படுக்கையில் கையில் IV ட்ரிப்ஸ் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாக சமந்தாவின் ரசிகர்கள் அவரது உடல்நிலை குறித்து கவலையடைந்துள்ளனர். சமந்தா சிறிது காலமாக மயோசிடிஸ் நோயுடன் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like