1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்கள் அதிர்ச்சி..! நடிகர் ஃபகத் ஃபாசிலுக்கு ADHD குறைபாடு உறுதி!

1

மலையாள சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் ஃபகத் ஃபாசில் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் தனக்கென்ற ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்த தசாப்தம் கண்ட சிறந்த நடிகன் என்றும் அவரைப் பலரும் புகழ்ந்து வருகின்றனர். இவர் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தில் ரத்தினவேல் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக மிகச்சிறப்பாக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.

சமீபத்தில் வெளியான ஆவேஷம் படத்தில் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தனது ஏ.டி,எச்.டி என்கிற கவனக்குறைவு பாதிப்பு இருப்பதாக ஃபகத் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ADHD என்பதன் முழு விரிவாக்கம் Attention deficit/hyperactivity disorder.ஒரே விஷயத்தில் அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது. எளிதில் திசைத்திரும்பக் கூடிய தன்மையுடையவர்களாக அவர்கள் இருப்பார்கள்.அதிக சுட்டித்தனம், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை, அவசர குணம் போன்ற பொதுவான அறிகுறிகளை இந்த நிலையால் பாதிக்கப்பட்டவர்களில் பார்க்கலாம்.தனது 41 வயதில் தனக்கு ஏ.டி.எச்.டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஃபகத் ஃபாசில் தெரிவித்துள்ளது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 இந்த நிலையால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் ஞாபக மறதி, அன்றாட வேலைகளை செய்வதில் சிரமப்படுபவர்களாக இருப்பார்கள்.ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் , ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நரம்பியல் மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களே.

Trending News

Latest News

You May Like