1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்கள் ஷாக்..!! பிரபல ஹாலிவுட் நடிகர் சுட்டுக் கொலை..!

Q

Army wives ஹாலிவுட் தொடர் மூலம் நடிகரானவர் அமெரிக்காவை சேர்ந்த ஜானி வாக்டர். ஜெனரல் ஹாஸ்பிடல் தொடரில் பிராண்டோ கார்பின் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை காலை ஜானி வாக்டரின் காரில் இருந்து catalytic கன்வர்ட்டரை திருட மூன்று பேர் முயற்சி செய்தார்கள். அதை பார்த்த ஜானி அவர்களை நோக்கிச் செல்லவே அவர்கள் ஜானியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்கள்.

காயம்பட்ட ஜானியை அருகில் இருந்த மருத்துவனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இந்த கொலை தொடர்பான குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகிறார்கள். ஜானி வாக்டரின் எதிர்பாராத இழப்பு ஹாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 


 

Trending News

Latest News

You May Like