செல்ஃபி எடுப்பதாக கூறி நடிகை பூனம் பாண்டேவை முத்தமிட முயன்ற ரசிகர்..!

2013ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான நாஷா படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பாண்டே. இவர் பாலிவுட்டில் கால் பதிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். சன்னி லியோனை போல் பூனம் பாண்டேவையும் ஒரு பாடலில் ஆட வைக்கவும், கவர்ச்சி படங்களில் நடிக்க வைக்கவும் வைத்தனர். ஆனால் பூனம் பாண்டேவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இதன்பின் மாடலிங்கில் ஈடுபட்ட பூனம் பாண்டே, கடந்த சில ஆண்டுகளாக ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் பூனம் பாண்டேவை ரசிகர்களும் ஆபாச நடிகை என்றே அடையாளப்படுத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாததில் திடீரென பூனம் பாண்டே உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியது.
ஆனால் அடுத்த நாளே கர்ப்பப்பை புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக்காகவே உயிரிழந்ததை போல் செய்தி வெளியிட்டதாக பூனம் பாண்டே தெரிவித்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்றது. இறப்பில் இப்படி விளம்பரம் தேடலாமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதனைத் தொடர்ந்து பூனம் பாண்டே வழக்கமாக தனது மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மும்பையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்த பூனம் பாண்டே, அங்கிருந்த ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று செல்ஃபி எடுக்க ஒப்புதல் அளித்தார். அப்போது முதல் நபராக செல்ஃபி எடுக்க வந்த நபர் ஒருவர், மொபைலை கையில் எடுத்து கொண்டு உடனடியாக பூனம் பாண்டேவுக்கு முத்தம் கொடுக்க முயன்றார்.
இந்த சம்பவம், பூனம் பாண்டே ஊடகங்களுக்கு பேட்டியளிக்க வந்த போது நடந்தது. பேட்டி அளிக்கும் போது, பின்னால் நின்ற அந்த நபர், எதிர்பாராத விதமாக, நடிகையை முத்தமிட முயன்றார். இதைக் காணும் போது, பூனம் பாண்டே அதிர்ச்சியுடன் அங்கிருந்து விலகி, அந்த நபரின் செயலுக்கு எதிராக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இந்த சம்பவம், நடிகையின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. உடனே, அவரது பாதுகாப்பு அதிகாரி அந்த நபரை பிடித்து அப்புறப்படுத்தினார், இதனால் பூனம் பாண்டே பாதுகாப்பாக இருக்க முடிந்தது. இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் பலர் இந்த சம்பவத்தை கண்டித்து கருத்து தெரிவிக்கிறார்கள்.
பூனம் பாண்டே, இந்த சம்பவத்திற்குப் பிறகு தனது சமூக ஊடக பக்கங்களில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார், மேலும் அவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் உறுதியானவர் என்பதை தெரிவித்தார்.