விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் கார்..!

தமிழ்நாட்டில் 2கே கிட்ஸ்கள் மத்தியில் சமீபத்தில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து வரும் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின் பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.
பாதுகாப்பான முறையில் வாசன் பைக்கை ஓட்டினாலும் அவர் 2கே கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. விமர்சனங்களைத் தாண்டி டிடிஎஃப் வாசனை யூடியிபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்த நிலையில், அண்மையில் இவர் நடிகராகவும் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அதன் போஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. பைக்கில் பறந்தபடி டிடிஎப் வாசன் நிற்கும் அந்த போஸ்டரை பார்த்து படத்திலும் இவர் பைக்கராக நடிக்கிறார் என்று மக்கள் கருதினர்.
இந்த நிலையில் சென்னையில் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அமைந்தகரை அருகே டிடிஎஃப் வாசன் சென்றுகொண்டு இருந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் பைக்கில் சென்றவருக்கு காயமடைந்தது. காரின் முன்பகுதி சேதமடைந்தது.
இந்த விபத்தில் டிடிஎப் வாசன் காயங்கள் இன்றி தப்பினார். கார் விபத்துக்குள்ளானவுடன் அவர் அதில் இருந்து கீழே இறங்கி அங்கு வந்த ஆட்டோவில் ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.