பிரபல யூடியூபர் செய்த கேவலமான செயல்..! புரட்டியெடுத்த அண்ணன்கள்..!

நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து தீவிர அரசியலுக்கு திரும்பி இருக்கிறார். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி அவரது நடவடிக்கைகள் இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் வீடியோ மூலம் பேசிய விஜய் தனது கட்சியின் தொண்டர்களை விர்ச்சுவல் வாரியர்ஸ் என பாராட்டி இருந்தார்.
அப்படி ஒரு விருச்சுவல் வாரியர் தான் விஷ்ணு. சென்னையை சேர்ந்த இவர் தனது யூட்யூப் சேனலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கும், நடிகர் விஜய்க்கும் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் தான் விஷ்ணுவை சில இளைஞர்கள் சேர்ந்து புரட்டி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது நண்பனின் தங்கையிடம் விஷ்ணு பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன அந்த இளம் பெண், தனது அண்ணனிடம் நடந்தது குறித்து தெரிவித்திருக்கிறார். இதை அடுத்து அங்கு சென்ற அந்த இளம் பெண்ணின் அண்ணனும் அவரது நண்பர்களும் விஷ்ணுவை அடித்து துவைத்து அமர வைத்து மன்னிப்பு கேட்க வைத்திருக்கின்றனர்.
மேலும் அவரை தாக்கிய காட்சிகளும் அந்த வீடியோவில் வெளியாகியிருக்கிறது. அந்த தாக்குதலுக்கு காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால் விஷ்ணுவை தேடி சென்ற போது அவரது அலுவலகத்தில் ஆணுறை பாக்கெட்டுகள் இருந்திருக்கிறது. ஒரு youtube சேனல் அலுவலகத்தில் ஆணுறைகள் எதற்கு என அதை காட்டியபடி அவர்கள் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.