1. Home
  2. தமிழ்நாடு

பிரபல எழுத்தாளர் கே.எஸ். சுப்ரமணியன் காலமானார்!

பிரபல எழுத்தாளர் கே.எஸ். சுப்ரமணியன் காலமானார்!


பிரபல எழுத்தாளரும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பருமான திரு. கே.எஸ். சுப்ரமணியன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் பல நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் கே.எஸ்.சுப்ரமணியன். எழுத்தாளர் ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பராவார். ஜெயகாந்தனுடனான நீண்ட கால நட்பே, ஜெயகாந்தனைப் பற்றி எழுதவும், கருத்துத் தெரிவிக்கவும் தனது தகுதியாய் அமைந்தது என்று தன்னடக்கத்துடன் சொல்வார். திரு.கே.எஸ்.சுப்ரமணியன் சமீபத்தில் தான் கொரோனா ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றிய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'Lockdown Poems' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருந்தார்.

ஏசியன் டெவல்ப்மென்ட் வங்கியில் பணிபுரிந்துள்ள் திரு.கே.எஸ்.சுப்ரமணியன் இதுவரையில் சுமார் 50க்கும் அதிகமான நூல்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றவர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு எதிராக விசிக சார்பில் மக்கள் நலக் கூட்டணியில் இவரது மனைவி வசந்தி சுப்ரமணியன் போட்டியிட்டிருந்தார். இலக்கிய உலகிற்கு திரு.கே.எஸ்.சுப்ரமணியனின் மறைவு பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like