பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாஸ்டியன் காலமானார்..!
1966ஆம் ஆண்டு பிறந்த ஜாலி பாஸ்டின் கேரளாவைச் சேர்ந்தவர். கன்னடம் உட்பட மொத்தம் 900க்கும் மேற்பட்ட படங்களில் பைக் சேஸிங் டூப் உள்ளிட்ட பிற ஸ்டண்ட்களை செய்து வந்தார்.
ஜாலி பாஸ்டின் கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், பெங்களூரில் படித்து டிப்ளமோ முடித்தவர். பைக் மெக்கானிக்காக பணியாற்றிய இவர், ஸ்டண்ட் மீது கொண்ட ஆர்வத்தால் திரையுலகில் நுழைந்தார். எந்த விதமான ஸ்டன்ட்களையும் அனாயாசமாக நிகழ்த்திய ஜாலி பாஸ்டின், தமிழ், மலையாளம், கன்னடப் படங்களில் மிகவும் பிரபலமானவர்.
இந்நிலையில், பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகர், இயக்குநருமான ஜாலி பாஸ்டியன் (57) மாரடைப்பால் இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 900-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் 'லாக் டவுன் டைரி' படத்தின் மூலம் தமிழில் இயக்குநராகவும் அறிமுகமானார். ரஜினி, சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, சிவராஜ் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.