பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை..!

ராணிப்பேட்டை அருகே பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடி சீனிவாசன் என்பவரை ரெண்டாடி கிராமத்தில் வயல்வெளியில் மறைந்திருந்து தாக்கிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. சம்பவ இடத்தில் டிஎஸ்பி ஜாஃபர் சித்திக் நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், 5 தனிப்படை கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக ரவுடி கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.