1. Home
  2. தமிழ்நாடு

பிரபல தயாரிப்பாளர் எம். ராமநாதன் காலமானார்!

Q

சத்யராஜின் மேலாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய ராமநாதன் சத்யராஜ் நடித்த உடன்பிறப்பு, வில்லாதி வில்லன், வாத்தியார் வீட்டுப்பிள்ளை, நடிகன், வள்ளல் உள்ளிட்டத் திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ராமநாதன் (72) காலமானார். சத்யராஜின் மேலாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய ராமநாதன், இன்று(ஏப்.07) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

சத்யராஜ் நடித்த வாத்தியார் வீட்டுப் பிள்ளை, நடிகன், வள்ளல், திருமதி பழனிச்சாமி, பிரம்மா, உடன்பிறப்பு, வில்லாதி வில்லன் மற்றும் விஜயகாந்தின் தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட படங்களை ராமநாதன் தயாரித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like