பிரபல பத்திரிக்கையாசிரியரின் வாகனம் தீ வைத்து எரிப்பு!மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு !
சென்னையில் பிரபல பத்திரிக்கையாளரின் வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவத்தில், குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நவீன நெற்றிக்கண் என்ற பத்திரிக்கை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதன் ஆசிரியராக ஏ.எஸ்.மணி உள்ளார். இந்நிலையில், பத்திரிக்கை அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராயல் என்ஃபீல்டு வாகனத்தை, நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் வாகனத்திற்கு தீ வைத்து எரித்து விட்டு தப்பியோடி விட்டனர். இது தொடர்பாக, ஏ.எஸ். மணி கொடுத்த புகாரின் பேரில், நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்பாட்டம் நடைபெறும் என பத்திரிக்கையாளர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், காவல்துறையின் வேண்டுகோளுக்கு இணைங்க ஆர்பாட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.