சென்னையில் பிரமாண்ட மருத்துவமனை கட்டும் பிரபல ஐடி நிறுவனம் !

சென்னையில் 2.6 லட்சம் சதுர அடி நிலத்தில் பிரம்மாண்டமான மருத்துவமனை ஒன்றை கட்ட சோகோ (ZOHO) நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னை காட்டாங்குளத்தூரில் இருக்கும் சோகோ (ZOHO) நிறுவனம் ஆப்கள், தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்குகிறது. இதன்மூலம் பல்வேறு நாடுகளில் இந்நிறுவனம் விரிந்து மிகவும் பிரபலமாக உள்ளது.
சென்னைக்குள் நுழையும் போதே கருப்பு நிற கண்ணாடிகளால் பிரமாண்டமான முறையில் வித்தியாசமான அமைப்பில் சோகோ (ZOHO) நிறுவன கட்டிடம் நம் கண்ணில் தென்படும்.
தற்போது கொரோனா தீவிரம் காரணமாக சென்னையில் 2.6 லட்சம் சதுர அடி நிலத்தில் பிரம்மாண்டமான மருத்துவமனை ஒன்றை கட்ட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. காட்டாங்குளத்தூர் அருகே இந்த மருத்துவமனை கட்டப்பட உள்ளது. மொத்தம் இந்த மருத்துவமனை சிகிச்சை அளிக்கும் பெட்கள் அடங்கிய பகுதி மட்டும் 1000 சதுர அடியில் கட்டப்பட உள்ளது.
முழுக்க முழுக்க தனிமைப்படுத்தப்படும் வசதிகளை கொண்டு இந்த மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. மொத்தமாக 250 பெட்கள் இருக்கும் வகையில் முதற்கட்டமாக இந்த மருத்துவமனையை அமைக்க உள்ளனர்.
இதற்காக முதற்கட்டமாக 70 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 12-16 மாதங்களில் இந்த பணிகள் அனைத்தையும் திறக்க உள்ளனர்.
newstm.in