1. Home
  2. தமிழ்நாடு

அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கும் இந்தியாவின் பிரபல பாடகி!

அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கும் இந்தியாவின் பிரபல பாடகி!


நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கும் புதிய படம் ஒன்றில் அவருக்கு பாட்டியாக இந்தியாவின் புகழ்பெற்ற பாடகி நடிக்கிறார்.

ட்ரெண்ட் லவுட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை அக்ஷரா ஹாசன் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அந்த நிறுவனம் வெப் சீரிஸ்களை எடுத்துவந்த நிலையில், முதல்முறையாக முழு நீள திரைப்படத்தை எடுக்க உள்ளது.

இந்தத்திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்த நிலையில், அடுத்த முக்கிய அப்டேட்டாக அந்தப்படத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகி உஷா உதுப் நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபல பாடகியான உஷா உதுப் மலையாளம், கன்னடா, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.  தமிழில் மன்மதன் அம்பு படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது அக்ஷரா ஹாசன் உடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் உஷா உதுப் அக்ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like