பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணம்!

புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து திரையுலகினர் சோகத்தில் உள்ளனர்.
திரையுலகிற்கே இந்த கொரோனா காலம் பெரும் சோதனையாக உள்ளது. எல்லா திரையுலகிலும் மிக முக்கியமான ஆளுமைகள் நம்மை விட்டு பிரிந்துவிட்டனர். பாலிவுட் தொடங்கி மலையாள சினிமாத்துறை வரை கலைஞர்கள் மறைவு நிகழ்ந்துள்ளது
அந்த வகையில் கன்னட திரை துறையிலும் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு கன்னட திரைப்பட இயக்குநர் விஜய் ரெட்டி சென்னையில் காலமானார். இதையடுத்து மூத்த நடிகர் கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இந்நிலையில் கன்னட தயாரிப்பாளர் எச்.கே.ஸ்ரீநிவாஸ் காலமானார். அவருக்கு வயது 70. அவர் ஜக்கீஸ் குண்டா மடுவே, சந்தன் சிகுரு உள்ளிட்ட ஏராளமான கன்னட படங்களை தயாரித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in