பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு!

 | 

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் உபல் தரங்கா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான உபுல் தரங்கா (36) 31 டெஸ்டுகள், 235 ஒருநாள் மற்றும் 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2005 இல் சர்வதேச கிரிக்கெட்டில் தனது பயணத்தை தொடங்கி தரங்கா கடைசியாக 2019இல் விளையாடினார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 15 ஒருநாள் சதங்களை எடுத்துள்ளார். 2011 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இரு சதங்கள் எடுத்து அசத்தினார். இந்நிலையில் 15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்த நான் ஓய்வு பெறுகிறேன் என அவர் கூறியுள்ளார்.


தன்னுடைய எல்லா நிலைகளிலும் ஆதரவாக இருந்த நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி என தரங்கா தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP