1. Home
  2. தமிழ்நாடு

ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்..!

Q

2015 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான மார்கஸ் ஸ்டோய்னிஸ், 71 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1495 ரன்கள் குவித்துள்ளார். அதிரடி ஆட்டக்காரரான இவர் ஒரு சதமும் அடித்துள்ளார். பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அவர் சர்வதேச ஓடிஐ போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர், ஆஸ்திரேலியாவுக்காக ODI போட்டியில் விளையாடியது ஒரு நம்பமுடியாத பயணமாகும்" என்றுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகுவது கடினமானது ஆனால் தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் கவனம் செலுத்த தேவையான முடிவு என்று அவர் கூறினார். பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட முடியாமல் போனாலும் 35 வயதான ஆல்ரவுண்டர் ஆஸ்திரேலிய அணிக்கு தனது ஆதரவை என்று தெரிவித்தார். 
ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவது ஒரு நம்பமுடியாத பயணமாக இருந்து வருகிறது, மேலும் நான் அணியில் கழித்த ஒவ்வொரு தருணத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது நாட்டை மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவது நான் எப்போதும் போற்றும் ஒன்று. இது எளிதான முடிவு அல்ல, ஆனால் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி எனது தொழில் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் முழுமையாக கவனம் செலுத்த இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன். ரான் (ஆஸ்திரேலிய ஆண்கள் அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட்) உடன் எனக்கு ஒரு அருமையான உறவு உள்ளது, மேலும் அவரது ஆதரவை நான் மிகவும் பாராட்டுகிறேன் என்றார்.

Trending News

Latest News

You May Like